Monday, September 30, 2019

Green Project Kaliyani

பசுமை கிராமம் :
GREEN PROJECT KALIYANI  

பசுமை சாலை:

இந்த வலைப்பதிவு மரங்களை வெட்டி போடப்படும் சாலையை பற்றியது அல்ல. நம் கிராமங்களில் உள்ள சாலை ஓரங்களில் மரங்களை வைத்து பசுமை ஆக்குவது. அனைத்து புதிய சாலைகளும் மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்ததாரர்கள் கணக்கிற்கு சில சிறிய மரக்கன்றுகளை நட்டு தங்கள் கடமையை நிறைவு செய்வர். எங்கள் கிராம சாலைகள் திட்டத்திலும் அப்படியே. 
இந்த வலைப்பதிவின் நோக்கமே அனைத்து கிராம சாலைகள் ஓரங்களிலும் மரங்களை நட்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முன் மாதிரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.


கலியணி கிராமம்
எங்கள் ஊர் கலியணி கிராமம்,  மங்களகுடி அருகில்  இராமநாதபுரம் மாவட்டம். வாணம் பார்த்த பூமி. மழை அளவு மிகவும் குறைவு. அதனால் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையை மாற்ற எங்கள் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைசெய்யும் இளைஞர்கள் கடந்த 6 மாதங்களாக இதற்கு முயற்சி செய்து அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி இருக்கிறோம். இதில் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மரங்களை தேர்வு செய்து சரியான இடத்தில் வாங்குவது. இதற்கு காரணம் எங்கள் பகுதியில் ஆடு மாடுகள் அதிகம் சுற்றி திரியும். சிறிய மரக்கன்றுகளை அதிக நாட்கள் பராமரிக்க வேண்டும். அதனால் நாங்கள் பெரிய மரக்கன்றுகளை தேர்வு செய்தோம். இணையத்தில் தேடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு இறுதியில் மதுரை அருகே வாடிப்பட்டியில் கிடைத்தது. மரம் நடும் நாளை நாங்கள் எங்கள் கிராம தேவதை அருள்மிகு முத்து மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாள் 12-08-2019 காலை 7.00 என்று குறித்து அதன்படி செயல்படுத்தி இருக்கிறோம்.



மரம்நடும் முன் 

முன் ஏற்பாடுகள்:
வட்ட வடிவ சிமெண்ட் உறைகள் மற்றும் மரத்திற்க்கான குழி 7 நாட்களுக்கு முன் 3' x 3' x 3' என்ற விகிதத்தில் குழி எடுத்து, மக்கிய குப்பை இடப்பட்டது.


மரக்கன்றுகள் தேர்வு:
பெரியகுளம் அருகே காமாட்சி நர்சரி, மதுரை அருகே லோட்டஸ் நர்சரி மற்றும் வாடிப்பட்டி குமரன் நர்சரிபோன்ற இடங்களில் 8 முதல் 10 அடி உயரத்தில் நன்கு வளர்ந்த மரங்கள் கிடைக்கிறது. வாடிப்பட்டி குமரன் நர்சரியில் மரக்கன்றுகளை தேர்வு செய்தோம்.

மரக்கன்றுகள் விவரம்:
  • நாட்டு வாகை மரம் = 5
  • இயல் வாகை மரம் = 5
  • ஆலமரம் = 5
  • அரசமரம் = 5
  • புங்கை மரம் = 3
  • மகிழம் மரம் = 2
  • நாவல் மரம் = 2
  • இலுப்பை மரம் = 2
  • Dyera Costulata = 5
  • வேம்பு = 2
  • வசந்த ராணி மரம் (Tabebuia rosea) = 5
  • கொன்றை மரம் = 5
மரம் நடும் நாள்:
12-08-2019 காலை 7.20 மணிக்கு தொடங்கி மாலை 7.50 வரை 44 மரக்கன்றுகள் நட்டு முடித்தோம்.


மரம் நடும் முறை:
  • 3' x 3' x 3' என்ற விகிதத்தில் எடுக்கப்பட்ட குழியில் மக்கிய குப்பையையும் குழியில் எடுக்கப்பட்ட மண்ணையும் கலந்து குழியில் இட வேண்டும் 
  • பின் உறையை கயிறு கட்டி இறக்க வேண்டும் 
  • அதன் பின்னர் குழி நாம் தேர்வு செய்த மரக்கன்றை அதன் நெகிலி தாளை நீக்கி உறையின் மையப்பகுதியில் வைக்க வேண்டும். 
  • கூடவே மரக்கன்றுக்கும் வலை பிடிமானத்திற்கும் சவுக்கு கம்புகளை உள்ளே வைத்து மண்ணை தள்ளவும். 
  • தேவையான உயரத்திற்கு உறையை கயிறு கொண்டு உயர்ந்தவும். 
  • பின் கம்புகளை ஒழுங்குபடுத்தி வலையை கட்ட வேண்டும். 
  • மரக்கன்றுகளை கண்டிப்பாக மைய கம்புடன் கட்டவும். இறுக்கமாக கட்ட கூடாது. 
  • இறுதியாக தாராளமாக தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும். 
  • தவறாமல் 2 நாள்களுக்கு ஒருமுறை நீர்விட வேண்டும். முதல் 1 மாதம் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். 
  • மழை பெய்தால் தண்ணீர் அளவில் மாற்றம் செய்துகொள்ளாம்.
திட்டமதிப்பு: ரூ 60,000
செலவு செய்தது: ரூ 54,480
வசூலிக்கப்பட்டது: ரூ 59,600
பராமரிப்பு செலவு: ரூ 3,500

நிதியுதவி:
து. மலைகன்ணன்
இரா. சுரேஷ் குமார் 
ச. இராஜ்குமார்
ச. சிவாஜி கணேசன்
ஆ. சத்தியசீலன்
ஆ. சிவபாலன்
ஆ. ஜெயசீலன்
வ. பழனிவேல்
ஆ. கணேசன்
செ. சதீஷ்
ப. இராஜா
சி. செந்தில்குமார்
செ. பிரபாகரன்

களப்பணி ஆற்றியவர்கள்:
து. மலைகன்ணன்
இரா. சுரேஷ் குமார் 
ச. இராஜ்குமார்
ச. சிவாஜி கணேசன்
ஆ. சத்தியசீலன்
ஆ. ஜெயசீலன்
செ. சதீஷ்
சி. செந்தில்குமார்
கி. இராஜா
மா. செந்தில்குமார்
ஆ. பழனிக்குமார்
மா. பாஸ்கரன்
சி. சச்சின் சிவகுமார்








பராமரிப்பு பணியில்:


Green Project Kaliyani

பசுமை கிராமம்  : GREEN PROJECT KALIYANI     பசுமை சா லை: இந்த வலைப்பதிவு மரங்களை வெட்டி போடப்படும் சாலையை பற்றியது அல்ல. நம் கிராமங்...